11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி: குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த தயாராகும் விவசாயிகள்
In இந்தியா January 24, 2021 9:09 am GMT 0 Comments 1355 by : Yuganthini

மத்திய அரசுடன் நடைபெற்ற 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி, குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி 30ஆயிரம் டிராக்டர்களுடன் 100கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரணி செல்லும் பாதை போன்றவற்றை ஆலோசிக்க விவசாய சங்க தலைவர்கள்- பொலிஸ் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் டிராக்டர் பேரணிக்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரணி, அமைதியான முறையில் நடத்தப்படும். குடியரசுதின விழாவை சீர்குலைக்கும் எண்ணமில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே விவசாயிகளின் பேரணியைக் கண்காணிக்க காசிபுர் எல்லையருகே பொலிஸார் கண்காணிப்பு கமராக்களைப் பொருத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.