நிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் – சுப்பிரமணியம் கோரிக்கை
In இலங்கை November 25, 2020 11:06 am GMT 0 Comments 1333 by : Dhackshala
நிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நிவர் புயல் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் மீனவ மக்கள் கடலுக்கு செல்லாது தங்கள் தொழில்களை விட்டு வீடுகளில் முடங்கியுள்ளார்கள். இதனால் பட்டினியை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையிலே இவர்களுடைய பசியினை நாங்கள் உடனடியாக போக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
இதற்கு உரிய தரப்பினர் குறிப்பாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் முக்கியமாக கடற்தொழில் அமைச்சு இந்த விடயத்தை கருத்தில் எடுத்து இதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.