சீனி இறக்குமதியில் மோசடி இடம்பெறவில்லை – லசந்த
In இலங்கை January 20, 2021 9:57 am GMT 0 Comments 1385 by : Jeyachandran Vithushan

சீனி இறக்குமதியில் 10 பில்லியன் ரூபா வரிமோசடி இடம்பெற்றிருக்கவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றுக்கு சீனி இறக்குமதிக்காக வரிச்சலுகை வழங்கப்பட்டதன் ஊடாக இந்த வரி மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க்பட்டிருந்தன.
இந்த நிலையில், நாடாளுமன்றில் இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, அவ்வாறான வரி மோசடிகள் இடம்பெறவில்லை எனவும் அது தொடர்பான அறிக்கைகளை தாம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அதில் வரிமோசடி இடம்பெற்றதாக பதிவாகவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.