16 வயதுக்கு உட்பட்டவர்களை தொழிலுக்கு அமர்த்த முடியாது
In இலங்கை February 23, 2021 7:47 am GMT 0 Comments 1203 by : Jeyachandran Vithushan

16 வயதுக்கு உட்பட்டவர் சிறுவர்களை தொழிலுக்கு உட்படுத்த முடியாது என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உடல் / மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவே இந்த முடிவு எட்டப்பட்டதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் குறைந்தபட்ச வயது முன்னர் 14 ஆக காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு 16 வயது வரை கல்வியை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சுரங்கம் போன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்த முடியாது என்றும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.