20 ரூபாய் நாணயக்குற்றி வௌியிடப்பட்டது!

இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று(வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 ரூபாய் நாணயக்குற்றி வௌியிடப்பட்டுள்ளது.
அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் 20 ரூபாய் நாணயக்குற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய 20 ரூபாய் நாணயக் குற்றிகள் மூவாயிரம் வௌியிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாட்டிற்கு அன்றி, மத்திய வங்கியின் தலைமையகம் மற்றும் மாவட்ட கிளைகளில் 1300 ரூபாவிற்கான 20 ரூபாய் நாணயக்குற்றிகளை மாத்திரம் விநியோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.