2030-ல் உலகின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் – அருண் ஜெட்லி
In இந்தியா April 7, 2019 2:15 pm GMT 0 Comments 2131 by : Jeyachandran Vithushan

2030-ம் ஆண்டில் உலகின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இந்தியா இருக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராம் கல்லூரி மாணவர்களுடன் உரையாடிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “2030-ம் ஆண்டு உலகின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இந்தியா இருக்கும்.
தற்போது இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2.9 டிரில்லியன் டொலராக உள்ளது. இதுவே 2030-ம் ஆண்டு 10 டிரில்லியன் டொலராக அதிகரிக்கும்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளதால் இந்தியா 5 மற்றும் 6 வது பொருளாதாரம் படைத்த நாடுகளுக்குள் உள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டொலராகவும், 2030 அல்லது 2031-ல் 10 டிரில்லியன் டொலராகவும் உயரும்.
உலகின் முதல் 3 பொருளாதாரம் படைத்த நாடுகளுக்குள் நாம் வந்த பிறகு அமெரிக்கா, சீனா, இந்தியாவிற்கு இடையில் தான் போட்டி இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் கட்டுமானம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் பாலினம் சமத்துவமின்மை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. 2011-ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்குக் கீழே 21.9 சதவீதத்தினர் இருந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறியது. அது தற்போது 17 சதவீதமாகக் குறைந்திருக்கும்.
2021-ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகவும், 2024-2025 நிதி ஆண்டில் ஒற்றை இல்லகமாகவும் குறையும். நடுத்தர மக்கள் சதவீதம் அதிகரிக்கும்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.