205ஆவது அமாதம் சிசிலச நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
In இலங்கை December 29, 2020 10:01 am GMT 0 Comments 1392 by : Yuganthini

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 205ஆவது உபதேச நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த கொழும்பு ஹிணுபிடிய கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரை வரவேற்றார்.
பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் இந்த உபதேசத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
புண்ணியம் செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதிற்கும் அவசியமான ஆறுதல், பலம் மற்றும் ஞானம் என்பன கிடைக்கும் என வணக்கத்திற்குரிய தேரர் உபதேசித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இடம்பெற்ற தர்ம உபதேசம், பக்தர்களின் பங்கேற்பின்றி பிரதமர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
அத்துடன் கொரோனா தொற்று நிலைமையிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறும் இதன்போது பிரார்த்திக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.