23ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டு.வில் புத்தாண்டு விழா
In இலங்கை April 20, 2019 8:02 am GMT 0 Comments 1919 by : Dhackshala
கிழக்கு மாகாண 23ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு விழா வந்தாறுமூலையில் இடம்பெற்றது.
இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண படைப்பிரிவின் எஸ்.எப்.தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜெயசேகர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக பங்கேற்று நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், 23வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கபில உடலுபொல உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இதன்போது தமிழ், சிங்கள பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றd.
மாவட்டத்தின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இன்று மாலை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதோடு, அதனைத்தொடர்ந்து நள்ளிரவு கொண்டாட்டங்களுடன் இந்நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா