3 கலரி மூடல் விவகாரம் – ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பையில்?
In கிாிக்கட் April 8, 2019 3:51 pm GMT 0 Comments 2448 by : Jeyachandran Vithushan

சேப்பாக்கம் மைதானத்தில் 3 கலரிகள் திறக்கப்படாத பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டத்திற்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டது. ‘பிளேஓப்’ சுற்றுக்கான திகதி, இடம் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கலரிகள் மூடப்பட்டு இருக்கிறது.
இந்த கேலரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த 3 கேலரிகளில் 12 ஆயிரம் ரசிகர்கள் அமரமுடியும். இந்த பிரச்சினை காரணமாக இறுதிபோட்டி சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம்.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்ராய் மற்றும் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவிதோக்டே, தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.