39 ஆயிரம் அவுஸ்ரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்: பிரதமர் ஸ்கொட் மோரிஸன்
In அவுஸ்ரேலியா December 12, 2020 11:12 am GMT 0 Comments 1521 by : Anojkiyan

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக விமான சேவை முடங்கியுள்ளதால், 39 ஆயிரம் அவுஸ்ரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செப்டம்பர் 18ஆம் திகதி வரையில், 45 ஆயிரத்து 950 அவுஸ்ரேலியர்கள் நாடு திரும்பி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான அவுஸ்ரேலியர்கள் மீண்டும் அவுஸ்ரேலியா வர விரும்புகின்றனர்.
5 ஆயிரம் பேர் பிரித்தானியாவில் தவிக்கின்றனர். பிற நாடுகளிலும் அவுஸ்ரேலியர்கள் சிக்கி உள்ளனர். அவுஸ்ரேலியர்கள் நாடு திரும்ப முன்னுரிமை அளிக்கிறோம். இருப்பினும் அவர்கள் நாடு திரும்புவதின் அவசியம் குறித்து நேரடியாக தொடர்பு கொண்டு கண்காணிக்கிறோம்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.