5 மணி நிலைவரப்படி தமிழகத்தில் 63.73 வீத வாக்குப்பதிவு

5 மணி வரையான நிலைவரப்படி தமிழகத்தில் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
இதற்கிடையே, மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
5 மணி நிலைவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கன்னியாகுமரியில் 100 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக முறைப்பாடு வந்துள்ளது. தமிழகத்தில் பெரிய வன்முறை நடந்ததாக தகவல் இல்லை. 2 அல்லது 3 இடங்களில் வேட்பாளர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள