50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் படுகாயம் !
In இலங்கை January 26, 2021 7:30 am GMT 0 Comments 1322 by : Jeyachandran Vithushan

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 03 பேர் படுகாயத்திற்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சாரதியுமே காயமடைந்துள்ளதாகவும் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.