504 விரைவான அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா!

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 504 விரைவான அன்டிஜன் பரிசோதனைகளில் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 11 வெளியேறும் இடங்களில் நேற்று(புதன்கிழமை) முதல் விரைவான அன்டிஜன் சோதனைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பயணிகள் அல்லது கொழும்பிலிருந்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இயங்கும் நீண்ட தூர பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மீதும் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.