58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனம்!
In இலங்கை February 20, 2021 9:03 am GMT 0 Comments 1244 by : Dhackshala

தற்போதைய அரசாங்கம் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.