8 குழந்தைகள் கொலை- 10பேரை கொலை செய்ய முயன்றதாக செவிலியர் மீது குற்றச்சாட்டு!
In இங்கிலாந்து November 12, 2020 6:03 am GMT 0 Comments 2084 by : Anojkiyan

செஸ்டர் மருத்துவமனையின் கவுண்டஸில் எட்டு குழந்தைகளை கொலை செய்ததோடு, மேலும் 10பேரை கொலை செய்ய முயன்றதாக ஒரு செவிலியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
30 வயதான லூசி லெட்பி, 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நவ-நேட்டல் பிரிவில் மரணங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டார்.
2015ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016ஆம் ஆண்டு ஜூன் வரை மருத்துவமனையில் சுமார் 15 குழந்தைகளின் மர்ம மரணம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கடந்த 2018ஆம் ஆண்டு முதன் முறையாக செவிலியர் லூசி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பிணையிலும் அவர் வெளிவந்துள்ளார்.
ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், 8 குழந்தைகள் கொலை மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள 30 வயதான ஹியர்ஃபோர்டில் உள்ள அரான் அவென்யூவைச் சேர்ந்த எம்.எஸ். லெட்பி வியாழக்கிழமை வாரிங்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இது இவ்வாறு இருக்க, இதே காலகட்டத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் மர்மமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பொலிஸில்; புகார் செய்து உள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.