92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு

ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு இந்த கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
வல்லரசு நாடுகள் பெரும்பாலும் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒப்பந்தங்களை பெற்றிருப்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு இலாப நோக்கமின்றி, பெப்ரவரி மாதம் முதல் குறைந்த விலைக்கு மருந்துகளை வழங்க உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பணக்கார நாடுகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உலகின் ஏழ்மையான நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.