சஹரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற முகாமொன்று முற்றுகை – இருவர் கைது!
In ஆசிரியர் தெரிவு May 6, 2019 10:42 am GMT 0 Comments 2855 by : Jeyachandran Vithushan
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் குறித்த இடத்தில் பயிற்சி பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த முகாம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக் பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட 38 தீவிரவாதிகள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் நுவரெலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
T56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி மற்றும் கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ஆம் திகதியன்று, தாக்குதலுகான இறுதி பயிற்சி சஹாரான் தலைமையில் இந்த கட்டிடத்திலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை இந்த தீவிரவாதிகள் குத்கைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.