AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி!

AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் பைசல் சுல்தான் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு சுகாதார துறையினரால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவின் Sinopharm தடுப்பூயை பெற்றுக்கொள்ள ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணையகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.