Avengers: Endgame – வசூலில் உலக சாதனை
In சினிமா April 29, 2019 6:20 am GMT 0 Comments 1824 by : adminsrilanka

உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெரஞ்சர்ஸ் திரைப்படத்தின் 4ஆம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி சாதனை படைத்து வருகின்றது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியலில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகமாகும்.
இத்திரைப்படத்தில் அயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், ஸ்பைடர்-மேன் என பல அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ளார். இப்படத்திற்கான தமிழ் வசனத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருந்தார். அதேபோல், இப்படத்தில், அயன்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார்.
இத்திரைப்படம் குறித்த விமர்சனம் அனைத்து தரப்பில் பாராட்டுக்களை குவித்திருக்கும் நிலையில், படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை செய்து வருகின்றது.
ரசிகர்களிடையே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் முன்பதிவுகள் மட்டுமே சுமார் 40 கோடி ரூபாய் தொட்டதாக திரைத்துறை வட்டாரங்களில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் 1,186 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சீனாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலாக 107 மில்லியன் டொலர் அதாவது, இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகப்பட்ச வசூலாகும்.
இந்த வாரத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் வசூல் இப்படியே தொடர்ந்தால் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் 5000 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் உலக சாதனை படைக்கும் என்று திரைத்துறை உரிமையாளர்கள் மற்றும் விநோயகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
ஹொலிவுட் படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வசூல் ஓப்பனிங் நிகழ்ந்தது அவெஞ்சர்ஸ் படத்திற்கு தான். அதேநேரம் இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.