COVID-19 அபாயம் குறைந்த ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கும் பரவுகிறது – GMOA
In ஆசிரியர் தெரிவு December 12, 2020 4:05 am GMT 0 Comments 2093 by : Jeyachandran Vithushan

குறைந்த ஆபத்து நிறைந்த பகுதியான மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே, மேல் மாகாணத்தில் வைரஸ் அதிகமாக பரவினாலும் புதிய நோயாளிகள் மற்ற பகுதிகளிலும் பரவலாக அடையாளம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அந்தவகையில் கண்டி, பண்டாரகம, கிழக்கு மாகாணம், புத்தளம் மற்றும் காலி போன்ற பிற பகுதிகளிலிருந்து கண்டறியப்பட்ட நோயாளிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள டொக்டர் ஹரித அளுத்கே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்று இலங்கையில் பரவுவது மிகவும் விரைவாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆகவே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.