முன்னாள் பாதுகாப்புச் செயலர் – பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
In ஆசிரியர் தெரிவு May 8, 2019 7:13 am GMT 0 Comments 2318 by : Jeyachandran Vithushan

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பாக, ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் குறிப்பிட்டிருந்தன. எனினும், அது தொடர்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் முன்னெடுக்கவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து பொலிஸ்மா அதிபரையும் பாதுகாப்புச் செயலாளரையும் பதவிநீக்குமாறு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
தொடர் அழுத்தங்களின் பின்னர் இருவரையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியமைக்கு இணங்க, பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்னாண்டோ கடந்த 25ஆம் திகதி விலகினார். எனினும், பொலிஸ்மா அதிபர் பதவி விலகாத நிலையில், கடந்த வாரம் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.