‘HUTCH Sri Lanka Super Series 2019’ மீண்டும் ஆரம்பம்
In வணிகம் April 8, 2019 11:23 am GMT 0 Comments 4070 by : adminsrilanka

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் Mobile Broadband வலையமைப்பான Hutch இலங்கை பந்தய வீரர்கள் சம்மேளனத்துடன் (SLARDAR) மீண்டும் இந்தவருடம் இணைந்துள்ளது.
இதனூடாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட ‘Hutch Sri Lanka Super Series 2019’ நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. அந்தவகையில், பந்தய ரசிகர்களுக்கு புகழ்பெற்ற 2019 Super Series பிரதான பந்தயங்களை கண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தசம்பியன் பட்டத்துக்காக வருடம் முழுவதிலும் போட்டியிடுவார்கள். Hutch Sri Lanka Super Series 2019’ நிகழ்வில், பத்து பந்தயங்கள் இடம்பெறும். இந்த விறுவிறுப்பான போட்டி நிகழ்வு ஆரம்பமாகி நவம்பர் மாதம் விருதுகள் வழங்கலுடன் நிறைவு பெறும்.
இதில் விளையாட்டுக்களுடன் விறுவிறுப்பு மற்றும் சாகசம் ஆகியன பிணைந்துள்ளன. இது போன்றதொரு முக்கியமான நிகழ்வுக்கு Hutch அனுசரணை வழங்குவதனூடாக தனது வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தி, முழுக் குடும்பத்துக்குமான களிப்பூட்டும் அனுபவத்தை சேர்க்க முன்வந்துள்ளது.
Hutch 4G Broadband சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. நாடு முழுவதிலும் 4G வலையமைப்பை விஸ்தரிப்பதனூடாக, இலங்கையில் Data மற்றும் Broadband வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.