ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விபரங்கள் இலங்கையில்! – பரபரப்பு தகவல்
In ஆசிரியர் தெரிவு May 9, 2019 4:45 am GMT 0 Comments 5741 by : Jeyachandran Vithushan

நுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹரானின் பயிற்சி மையத்தில் கிடைத்த மடிக்கணினியில் இருந்து சிரியாவைக் கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளன.
அந்த மடிக்கணினியில் பதிவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பு, உண்மையான ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு என புலனாய்வு பிரிவினரும் உறுதி செய்துள்ளனர்.
புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பிபிளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கையடக்க தொலைபேசியை புலனாய்வு பிரிவினர் பரிசோதித்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தொடர்பு வைத்திருந்தார் என ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணினியில் காணப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகபரின் பெயரும் பிபிளையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெயரும் ஒன்று என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த கணினியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சிரியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபரின் பெற்றோரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது, சிரியாவில் தங்கள் மகனை தேடிச் சென்று, சுமார் ஒன்றரை வருடங்கள் அங்கு தங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.