‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
In சினிமா April 19, 2019 10:16 am GMT 0 Comments 1835 by : adminsrilanka

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அடுத்த மாதம் 1ஆம் திகதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் வெளியீட்டு திகதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த படம் அடுத்த மாதம் 17ஆம் திகதி வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இதன் புதிய வெளியீட்டு திகதியுடன் கூடிய ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது.
ஹிப் ஹொப் ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆ.ர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங
-
புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனை
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமப
-
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கே.எஸ்.ரவிக்கு
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட
-
மத்திய அரசுடன் நடைபெற்ற 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திக
-
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங
-
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட