தேர்தலில் புதிய கூட்டணி அமைக்க தேசியவாத ஐரோப்பிய ஒன்றியக் கட்சிகள் ஒன்றிணைவு
In உலகம் April 8, 2019 3:42 pm GMT 0 Comments 2578 by : Jeyachandran Vithushan
ஜரோப்பிய, தேசியவாத குடியேற்ற எதிர்ப்புக் கட்சிகள் எதிர்வரும் ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பதற்கு தயாராகிவருகின்றது.
இத்தாலியின் மிலான் நகரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே நான்கு குழுக்களின் தலைவர்களும் இதனை கூட்டாக அறிவித்திருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் இத்தாலியின் பிரதிப் பிரதமர் மாட்டோ சால்வினி , ஜேர்மனியின் மாற்றத்திற்கான கட்சியின் தலைவர் ஜோர்ஜ் மெத்தென், த பின்ஸ் கட்சியின் உறுப்பினரும் வலதுசாரியுமான ஒலி கோட்ரோ மற்றும் டென்மார்க் மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்டேர்ஸ் விஸ்ரிசின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜரோப்பிய ஒன்றியத்தின் 60 வருட கால வரலாற்றில் என்றுமில்லாத வகையில் வலதுசாரிகளின் நம்பிக்கையானது, நாடாளுமன்றத் தேர்தலில் போதுமான பெரும்பான்மையினைப் பெற்று சபையினை நடத்துவதற்கான ஆணையைத் தரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியின் பிரதிப் பிரதமர் மாட்டோ சால்வினி, தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தீவிர வலதுசாரி கட்சிகளின் ஒத்துழைப்பானது எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜரோப்பிய ஒன்றியத் தேர்தலுக்கான தடைகளை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜேர்மனியின் மாற்றத்திற்கான கட்சியின் தலைவர் ஜோர்ஜ் மெத்தென் கருத்துத் தெரிவிக்கையில், ஜரோப்பிய ஒன்றியத்தை மறுசீரமைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு தாம் பாடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தீவிர மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜோர்ஜ் மெத்தென் குறிப்பிட்டிருந்தார்.
புதிதாக அமையுள்ள கூட்டணியானது ஜரோப்பிய நாடுகளுக்கும் மக்களுக்கானதுமான செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கருத்துத் தெரிவித்த இத்தாலியின் பிரதிப் பிரதமர் மாட்டோ சால்வினி, ஜரோப்பிய ஒன்றியத்தி;னை ஆட்சி செய்வதற்கு புதிய மாற்றுக் குழு தேவை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.