5வது முறையாக இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு மீண்டும் பதவியேற்றார்!
In உலகம் April 30, 2019 4:08 pm GMT 0 Comments 2537 by : Jeyachandran Vithushan

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து, நெதன்யாகு மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்துக்கு கடந்த 9-ம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
இதில், நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சி தலா 35 இடங்களில் வெற்றிபெற்றது. லிக்குட் கட்சிக்கு வலதுசாரி கட்சிகளும் ஆதரவு அளித்தன. எனவே, நெதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவதற்கு 65 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து நெதன்யாகு தலைமையிலான புதிய நாடாளுமன்றம் இன்று பதவியேற்றது. பிரதமராக நெதன்யாகு 5வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முதல் பிரதமர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றாலும், அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும். வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் பதவி விலக தேவையில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்து முறையீடுகளும் முடிவடைந்தால் மட்டுமே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.