‘NGK’ திரைப்படத்தின் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?
In சினிமா May 8, 2019 7:23 am GMT 0 Comments 1647 by : adminsrilanka

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘NGK’ திரைப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது இப்படத்தின் செட்டலைட் உரிமையும் விற்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்று 12 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதன்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்களுக்கு இரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் இத்திரைப்படத்தில் சூர்யா, ராகுல் ப்ரீத்திசிங், சாய்பல்லவி, சரத்குமார், பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம