எட்டுப்பேரைக் கொலைசெய்த குற்றவாளிக்கு சிறையில் தாக்குதல்!
In கனடா April 17, 2019 6:28 am GMT 0 Comments 2037 by : Jeyachandran Vithushan

தொடர் கொலைகளைச் செய்ததாக நீதிமன்றினால் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரூஸ் மெக்கார்த்தர் மீது சிறைக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் கடந்த வாரம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோ, கிங்ஸ்ரன் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதிகூடிய பாதுகாப்புமிக்க மில்ஹேவன் சிலைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது, அங்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து அவர் கடந்த 11ஆம் திகதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்கள் எவையும் வெளியாகவில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் எட்டு பேரை கொலை செய்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல
-
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்
-
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்
-
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்க
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ