இராணுவ உடை அணிந்தவர்களால் 5 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் – எச்சரிக்கை!
In இலங்கை April 29, 2019 1:18 pm GMT 0 Comments 4352 by : Jeyachandran Vithushan

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (MSD) தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ உடை அணிந்தவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்புதுறை அதிகாரியிடம் அனைத்து பாதுகாப்பு தலைவர்களுக்குமான கடிதம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவலில்,
“இலங்கையில் 5 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் சத்தியம் உள்ளது. அந்த 5 இடங்களில் மட்டக்களப்பும் உள்ளடங்கியுள்ளது. மேலும் 4 இடங்கள் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதில் அதிக சனத்தொகை காணப்படும் இடங்கள் இலக்காக வைக்கப்படலாம்.
அத்தோடு இதை மேற்கொள்பவர்கள் இராணுவ உடை அணிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து தலைநகர் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முப்படை விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சரவதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம