சூடான் ஜனாதிபதி கைது : பரபரப்பிற்கு மத்தியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது!
In ஆசிரியர் தெரிவு April 11, 2019 1:19 pm GMT 0 Comments 4263 by : Jeyachandran Vithushan

30 ஆண்டுகளின் பின்னர் பதவி விலகிய சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவத் இபின் ஓஃப் தெரிவித்துள்ளார்.
ஒமர் அல் பஷீர் இன்று (வியாழக்கிழமை) பதவி விலகியுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் இடம்பெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் சூடான் இராணுவம் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு குறித்த பகுதியில் மேலும் 3 மாதங்கள் வரை அவசரகால நிலையை நீடிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் அரசாங்கத்தை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கடந்த மாதங்களாக ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
மேலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள