UPDATE பரபரப்பாகும் சூடான்: அரசியல் கைதிகள் விடுதலை – முக்கிய அதிகாரிகள் கைது
In ஆபிாிக்கா April 11, 2019 8:59 am GMT 0 Comments 2443 by : Jeyachandran Vithushan
சூடானில் நிலவிவரும் பரபரப்பிற்கு மத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும் கடந்த 6 ஆம் திகதியில் இருந்து ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு அவர்களது அறிவிப்பிற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பஷீர் பதவி விலகல் – இராணுவம் குவிக்கப்பட்டு பரபரப்பாகும் சூடான்
சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமர் அல் பஷீர் இன்று (வியாழக்கிழமை) பதவி விலகியுள்ள நிலையில் நாட்டை வழிநடத்துவதற்கான இடைக்கால சபையை அமைக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பஷீர் பதவி விலகியதன்பின் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவச் சபை முயற்சி செய்து வருவதாகவும், உற்பத்தி மற்றும் பொருளாதார வளங்கள் அமைச்சர், அடெல் மஹ்ஜூப் ஹுசைன் டுபாயை தளமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் சூடான் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு அடுத்த நகர்வு குறித்து இராணுவம் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கார்ட்டூமில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சூடானில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டு தேச பக்தி பாடல்களை ஒளிபரப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மக்கள் ஜனாதிபதியை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுத்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.