தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை – பரபரப்பு தகவல் வெளியானது
In ஆசிரியர் தெரிவு May 4, 2019 4:53 am GMT 0 Comments 7571 by : Jeyachandran Vithushan
கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் முக்கிய புள்ளியென கருதப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் இருப்பதாக புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு அரச ஊடகம் இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு என தெரியவர ஜனாதிபதி அந்த அமைப்பினை தடை செய்திருந்தார்.
இந்நிலையில் ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரியாக சென்றது சஹரானே என இந்த வாரம் உறுதிப்படுத்தி பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இதனை அடுத்து அந்த அமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று வெளியான குறித்த செய்தியில், தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூரத்தில் இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைதாரியின் உடல் என்று சொல்லப்படும் சஹ்ரானுடன் குறித்த சம்பவத்தில் எடுத்த உடல் ஒத்துபோகவில்லை என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் தாக்குதல்களை வேறு ஒரு வடிவத்தில்வேறு எங்காவது நடத்த சஹரான் உயிருடன் இருக்கக் கூடுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டே உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.