வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -04

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 4 கல்லணையைப் பார்வையிட்ட உள நிறைவோடு மதுரையை நோக்கிய  எமது பயணம் தொடங்கியது. பொதுவாக காலை நேரப் பயணங்களில் உற்சாக மிகுதியில் திளைத்திருக்கும் நாம்  மாலைநேரப்  பயணங்களில் உடல் சோர்ந்திருப்போம். பெரும்பாலும் அருகிலிருப்பவருடன் பேசிக்கொண்டே  பயணவேளை கடந்து செல்லும். அவ்வேளைகளில் எமது குடும்பத்தவருடன் தொலைபேசியூடாக  உரையாடுவதும்  வழமையாகிப்போயிருந்தது. இரவு எட்டு மணியளவில் மதுரை TTDC  ஹோட்டலை அடைந்திருந்தோம். முதல் நாளைப் போன்றே இணைப்பாளர்கள் எமக்கான அறைகளை ஒதுக்கித்தர  இருவர் இருவராக அறைகளைப் … Continue reading வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -04