நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) மேலெழுவாரியாக ஓட்டமாவடி பிரதேசத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில் முகக்கசவம் அணியாது வீதிகளில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோரை பொலிஸாரின் உதவியுடன் பிடித்து மேலெழுவாரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இதில் ஆறுபத்தி ஐந்து பேருக்கு பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.