அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்து அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என வடக்கு கிழக்கு மாகாண இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் செயலாளர் ஜீ.ருபேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கூளாவடியிலுள்ள அவரது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு இன்று போராட்டம் ஆரம்பித்து 100 வது நாள் இந்த காலகட்டத்திலே இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுக்கான தேசிய ஓற்றுமை அமைப்பின் ஊடாக இந்த போராட்டத்தினை தொடர்ந்து கொண்டு போவதாக முடிவு எடுத்திருக்கின்றோம்.
இருந்தபோதும் சில சங்கங்;கள் 25 ம் திகதி வேலைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். இருந்துபோதும் நாங்கள் ஆரம்பத்திலே தெரிவித்தோம் இந்த போராட்டம் வெற்றி பெறும்வரையில் தொடர்ந்து போராடுவதாக அதேபோன்று எங்களுடன் இணைந்திருக்கின்ற 19 சங்கங்களுடன் ஒன்றிணைந்து முடிவினை எடுத்திருக்கின்றோம்.
அரசாங்கம் சரியான தீர்வினை பெற்றுத்தரும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து செல்லும் அதேவேளை இந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றவர்களுக்கு தெட்டதெளிவாக செல்லுகின்றோம் உங்களைப்போன்று எமது போராட்டம் இடை நடுவில் கை விடமாட்டோம்.
அவ்வாறே தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கின்ற அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம் அழுத்தங்களை கொடுக்காது இந்த ஆசிரியர்களுக்கு சரியான தீர்வை பெற்றுக் கொடுங்கள் நாட்டினுடைய நிலமையினை கருத்தில் கொண்டு சுற்று அறிக்கையை கேட்டிருக்கின்றோம் எனவே இந்த சுற்று அறிக்கையை நிறைவேற்றி தீர்வை வழங்குங்கள்.
கிழக்கு மாகாணத்திலே 21ஆம் திகதி பாடசாலைகள் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுவதாகவும் பாடசாலை ஆரம்பித்தால் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் ஆசிரியர் அல்லாத வேறு நபர்களை அழைத்து கல்வியினை தொடர்வதாகவும் கிழக்கு மாகாணத்திலுள்ள 98 வீதமான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அந்த ஊசி வழங்கப்படாதவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.
எனவே இவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கவிரும்புகின்றேன் மாணவர்களில் அக்கறை இல்லாதா இந்த விடையத்தை கூறுகின்றீர்கள் ஆசிரியர்களை விட இந்த மாணவர்கள் தான் இந்த போக்குவரத்திலேயே ஏனைய இடங்களில் நெரிசலாக இருப்பார்கள் எனவே மாணவர்களுக்கு சரியாக தடுப்பூசியை வழங்க கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கையை எடுத்திருக்கின்றீர்களா?
எனவே உடனடியாக மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தடுப்பு ஊசியை வழங்க முன்வரவேண்டும். அதேவேளை வீட்டிலே இருந்த மாணவர்கள் கல்வியில் இருந்து விலகி இருக்கின்றார்கள். இவர்கள் கல்வியை உடனடியாக கற்பதற்கு தயாராகவில்லை எனவே அவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்பத்தினையும் உளநிலையை மாற்றக் கூடிய விடயங்களை திட்டமிட்டு அதற்குரிய நடவடிக்கையினை அனைவரும் முன்வந்து எடுக்கவேண்டும்
முதலில் எங்களுடைய பிரச்சனையை ஏற்றுக் கொள்ளுங்கள் அதன் பின்னர் பாடசாலையை திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். எனவே அரசாங்கம் இந்த போராட்டத்தினை மேலும் மேலும் இழுத்தடிக்காது இதற்கான தீர்வுகளை வழங்கி பாடசாலை ஆரம்பித்து மாணவர்கள் இழந்த கல்வியை கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை ஆசிரியர்களே அதிபர்களே யார்கூறுகின்றவற்றுக்கும் செவிமடுக்காது ஒற்றுமையாக ஒன்றினைந்திருங்கள் நாங்கள் உங்கள் பாதுகாப்பு மற்றும் அனைத்து விடயங்களை சரியாக செய்வோம் உங்களோடு இருப்போம் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம் இந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமவரை போரடுவது என. எனவே தீர்வு கிடைக்குழ்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.