வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லையென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை மாற்றப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது தொடர்பில் எடுத்த முடிவுகள் தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாத நிலையே இருந்தாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ். மாவட்ட உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் எந்தவித பேச்சுவார்தைகளும் முன்னெடுக்கப்படாமல்,எந்தவித மக்கள் மத்தியிலும் எந்த கருத்துகளும் பெறாமல் நடைபெற்றதாகவும் இதுவரையில் ஒரு பொதுமகன் கூட ஏன் கொள்கையினை மாற்றினீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை ஏற்பாட்டில் அதிகாரப்பகிர்வில் 13வது திருத்தத்தின் நோக்கு நிலை என்னும் தலைப்பிலான கருத்தரங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்நிகழ்வில், தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பில் பேரா சிரியர் றமீஸ் அப்துல்லாவும்,இராஜதந்திர நோக்கு நிலையில் தமிழர் அரசியல் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் யதீந்திராவும் கிழக்கு மக்களின் இருப்பும் அரசியல் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் த.வசந்தராசாவும் மற்றும் அறிவாந்த சமூகமும் அரசியல் இருப்பும்
தொடர்பாக வா.குணாளனும் உரையாற்றிய அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுஅம்ணர உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
களநிலைமைகளுக்கு ஏற்றாற்போல் எமது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.