கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆலய திருவிழா இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடக்கிறது.
விழாவின் 2-வது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகின்றது.
திருவிழாவையொட்டி,மண்டபம் முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலும் நேற்று முதலே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.