இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டது.
நாட்டுக்காக உயிர்நீர்த்த பொலிஸ் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடாத்தப்படும் இந்த நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தின் முன்பாகவுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்கசர்கள்,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள்,ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டதுடன் பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதுவரையில் இலங்கையில் 3143 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் இதில் யுத்த காலத்தில் 2598 பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஏனைய வகையில் 545பொலிஸ் உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளதாக இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தெரிவித்தார்.