தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டி பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான பவனியொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் இந்த பவனி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தலைமையிலான வைத்தியர்கள்,தாதியர்கள்,சுகாதார திணைக்கள ஊழியர்கள் இந்த பவனியில் கலந்துகொண்டனர்.
துவிச்சக்கர வண்டி பயணங்கள் மூலம் விபத்துகளை குறைக்கமுடியும் என்பதுடன் உடல்நலம் பாதுகாக்கப்படும் என்பதுடன் எரிபொருள் தட்டுப்பாட்டையும் நிவர்த்திசெய்யமுடியும் என்கின்றார் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்.