வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றது.
தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம் பெற்றது.
இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டதாக கடல் தொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
இதற்கு இந்திய துணை தூதர் அனுமதி பெற்று தருவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.