மட்டக்களப்பில் நடக்கும் இரண்டு லட்சம் ரூபாய் என்று எங்களது மக்களை பேய் காட்டி பேரம் பேசி லஞ்சம் கொடுக்கும் இந்த வேலையை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த செயற்பாட்டினை கண்டித்து நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபி முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி வேண்டுகோள் விடுத்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்தார்
.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எட்டு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள் எமது உயிர்களுக்காக இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
எங்களது விலைமதிப்பற்ற உயிர்களுக்கு இரண்டு லட்சத்தினை இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமான முறையில் ஜனாதிபதி ஆணைக் குழு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த இரண்டு லட்சம் ரூபாய் எங்களது உயிர்களுக்கு வழங்கப்படும் லஞ்சம் தான். இவர்கள் லஞ்சம் தான் கொடுக்கின்றார்கள்.
ஐநாவில் இடம் பெற்று வரும் 51 வது தொடர் தொடரில் இன்னும் இலங்கை அரசு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். அவர்கள் அவர்களது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக எங்களது அப்பாவி வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பலிக்கடாவாக்கி அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து தங்களது உயிர்களுக்கு பேரம் பேசுகின்றனர்.
ஒரு லட்சம் என்றார்கள் தற்பொழுது இரண்டு லட்சம் என்கின்றார்கள் அடுத்த வருடம் 3 லட்சம் என்பார்கள்.
எட்டு மாவட்டத்தில் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் இந்த ஜனாதிபதி ஆணைக் குழுவை நீங்கள் நம்ப வேண்டாம்.இன்று பொருளாதார தடை உலக நாடுகளுக்கு எவ்வளவோ கொடுக்கவிருக்கும் இந்த அரசு இந்த இரண்டு லட்சம் ரூபாய் எங்களுக்கு அப்படி தரும் இதுவும் ஒரு ஏமாற்று வேலை தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இன்று மட்டக்களப்பில் நடக்கும் இரண்டு லட்சம் ரூபாய் என்று எங்களது மக்களை பேய் காட்டி பேரம் பேசி லஞ்சம் கொடுக்கும் இந்த வேலையை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாளை மட்டக்களப்பில் நடக்க இருக்கும் போராட்டத்தில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் பொதுமக்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மதகுருமார் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.