மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் இன்று ( வியாழக்கிழமை) புகுந்த யானைகளினால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தரு மரங்களும் அழிக்கப்படடுள்ள.
35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் உள்ள சிறி நாராயணன் ஆலயத்திற்குள் புகுந்த யானைகளே இந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய திருப்பணிவேலைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவு மற்றும் தென்னை மரங்கள் மின் இனைப்பு பெட்டி ஆகியவற்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதேபோன்று காட்டுயானையினால் இன்று அதிகாலை 35ம் கிரமத்துக்கு புகுந்த யானை 10 மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் பயிர்களையும்சேதப்படுத்தியுள்ளது.
யானையின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அதிகாரிகள் யானையின் அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகர்புறங்களுக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும் மக்கள் தெரிவிக்கின்றனர்.