வவுனியாவில் மக்கள் திட்டம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலக உணவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
“பட்டினி மந்த போசாக்கு என்பது திட்டமிட்டு குற்றமாகும்” எனும் தொனிப்பொருளில் வட மாகாண மக்கள் திட்டம் ஒன்றியத்தின் இணைப்பாளர் ந.தேவகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அருந்ததி விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு, வெலிஓயா வவுனியா போன்ற பிரதேசங்களில் செயற்படும் அவ் அமைப்பாளர்களின் ஒத்துழைப்பில் மக்களுக்கு உணவளிக்கும் முறையில் மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் எனும் கருப்பொருளை மையப்படுத்தி அவ் அமைப்பினரால் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.
நிகழ்வின் இறுதியில் மண்டபத்திற்கு வெளியே தமது பிரகடனத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.
காணி மற்றும் விவசாய சீரமைப்பு இயக்கம் மக்கள் திட்டம் ஒன்றியத்துடன் இணைந்து உலக உணவு தினத்தை மேற்கொண்டனர்.