அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் பால்கே விருதினை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தபடத்தில் அல்லு அர்ஜுன் லொறி சாரதியாகவும், அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















