முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது 31 வருடங்களுக்குப்பின் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள கட்டடம் திறந்துவைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் கிளையின் ஒருங்கமைப்பில் இன்று காலை 9.40 மணிக்கு மாவட்ட செயலகத்தின் புதிய மாநாட்டு மண்டபத்தில் உலக வளிமண்டலவியல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் கே.டி.சுஜீவ மற்றும் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மகாவித்தியாலய உயர்தர புவியியல் பாட மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.