பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
ஒரு வருட பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக, மதியம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், தொற்றுநோய்களின் போது துயரமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார்.
20:00 மணிக்கு தொலைபேசிகள், மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச்சுகள் ஆகியவற்றின் ஒளி கொண்டு மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நிற்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனை தொண்டு நிறுவனமான மேரி கியூரியால் ஏற்பாடு செய்துள்ளது.