சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணின் உடல், தற்போது இங்கிலாந்தின் டெர்பி நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அன்னா பொடெட்வோர்னா (Anna Podedworna) என்ற பெண், தனது இணையரான இசபெல்லா சப்ளோக்காவைக் ( Izabela Zablocka) கொலை செய்துவிட்டு, உடலை வெட்டிப் புதைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டில் நடந்த இந்த கொலை சம்பவத்தை மறைக்க, உடலைப் புதைத்த இடத்தின் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், இப்பெண்களுக்கு இடையே இருந்த முரண்பாடு மற்றும் தகராறுகளே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் கசாப்புக் கடை தொழிலாளியான அன்னா பொடெட்வோர்னா (Anna Podedworna) என்ற பெண், தனது தொழில்முறைத் திறமையைப் பயன்படுத்தி இந்த உடல் சிதைப்பை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட கால மர்மத்திற்குப் பின்னர் , அன்னா காவல்துறையினருக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலமாகவே இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.














