ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் போரில் “முன்னணி வரிகளில் ஈடுபடவில்லை” என கூறியுள்ளார்.
“அமெரிக்காவுக்கு நேட்டோ எப்போதும் தேவையில்லை” என்றும், கூட்டாளிகள் அவசர நேரத்தில் உதவ மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகள் பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
பிரித்தானிய அரசியல்வாதிகள், “நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளன” எனக் குறிப்பிட்டனர்.
20 ஆண்டுகள் நீண்ட போரில் 457 பிரித்தானிய வீரர்கள், 150 கனடியர்கள், 90 பிரெஞ்சு வீரர்கள், 44 டேனிஷ் வீரர்கள் உயிரிழந்தனர்.
பிரித்தானிய அமைச்சர் ஸ்டீபன் கின்னொக், “இது மிகுந்த ஏமாற்றம் தரும் கருத்து எனவும் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் உயிர்நீத்துள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இது குறித்து லிபரல் டெமோக்ராடிக் கட்சித் தலைவர் எட் டேவி, கூறுகையில் “ட்ரம்ப் வியட்நாம் போரில் ஐந்து முறை சேவையைத் தவிர்த்தவர் எனவும்
அவர் வீரர்களின் தியாகத்தை கேள்வி கேட்பது தவறு” எனவும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவகாரம், அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டணி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.நேட்டோவின் பங்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து உலகளவில் விவாதம் தீவிரமாகிறது.














