இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
ஆர்.பி.எப். எனப்படும் ரயில்வே பொலிஸ் படையின் கீழ், இந்த மனித வடிவ ரோபோ இயங்கும் என கூறியுள்ளனர்.
இதற்கு ‘ஏ.எஸ்.சி.இ அர்ஜுன்’ என பெயரிட்டுள்ளனர்.
இந்த மனித வடிவ ரோபோவை முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வடிவமைத்துள்ளனர்.
இது பாதுகாப்பு கண்காணிப்பு, கூட்ட மேலாண்மை, துாய்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
ஆங்கிலம்இ ஹிந்திஇ தெலுங்கு ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகள் வெளியிடும்.
ஆர்.பி.எப். பொலிஸாருடன் இணைந்து நடைமேடைகளில் ரோந்து பணிகளிலும் ‘ஏ.எஸ்.சி.இ அர்ஜுன்’ ரோபோவை ஈடுபடுத்த உள்ளனர்.
















