கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா – ஜா-எல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜா-எல நோக்கிப் பயணித்த லொறியொன்று, எதிர்த்திசையிலிருந்து வந்த சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்துடன் தொடர்புடைய மற்றைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பஹா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














